விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு : தனியார் சேனல் வாக்கு கணிப்பில் தகவல்!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்று, தனியார் சேனல் ஒன்று நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் சேனல் மேற்கொண்ட, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை காரணம் காட்டி, முன்னணி நாளேடு ஒன்றின் இணைய தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

அதன் படி, விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுகவுக்கு  46.50 சதவிகிதமும், திமுகவுக்கு    44.50 சதவிகிதமும் நாம் தமிழர் கட்சிக்கு  2.5 சதவிகிதமும், இதர வேட்பாளர்களுக்கு   2.5 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியில், அதிமுகவுக்கு 46.52 சதவிகிதமும், திமுகவுக்கு    42.48  சதவிகிதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.7 சதவிகிதமும், மற்றவர்களுக்கு   2.5 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளிலும், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டிருந்தாலும், அதிமுக திமுகவுக்கு இடையேயான வாக்கு வித்யாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகள் போன்றவை எல்லா சமயங்களிலும் சரியாக அமைவதில்லை. எனினும், நாளை ஒருநாள் காத்திருந்தால், உண்மையான நிலவரம் தெளிவாக தெரிந்து விடும்.