மீண்டும் தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்?

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதே, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது உள்ள பருவ நிலை மற்றும் அரசியல் நிலையால், உள்ளாட்சி தேர்தல்கள் மீண்டும் தள்ளிப்போகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் ஆகி வருகிறது. இந்த மழை, உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த உத்தேசித்துள்ள, நவம்பர் மாதத்தில் இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழையின் தாக்கம் அதிகரித்தால், தேர்தல் நடத்துவது எளிதல்ல. இதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கலாம். கடைசி நேரத்தில் இதுதான் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநிலங்களுக்கு, மத்திய அரசால் நிதி வழங்க முடியாது. ஏற்கனவே, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசும் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் சற்று ஆசுவாசம் செய்து கொள்ளவும் தேர்தல் தள்ளிப்போவது நல்லது.

இந்த இரண்டு காரணங்களால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும், சம்பந்தப்பட்ட துறையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில், எதையும் உறுதி செய்ய முடியாது.