ஜெயிக்கப்போவது யாரு?: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது பகல் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், ஆட்சியில் எந்தவித  மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. என்றாலும், வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும்.

இதன் காரணமாகவே திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இவ்விரு தொகுதிகளிலும் மும்மரமாக பணியாற்றின.

நாங்குநேரி இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜநாராயணன், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரிநாடார் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 414. ஆனால் 1 லட்சத்து 70 ஆயிரத்து 624 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

தேவேந்திர குல வேளாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை புறக்கணித்ததால், வாக்குகள் அதிகம் பதிவாகவில்லை.

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் களமிறங்கி உள்ளனர்.

இந்தத் தேர்தல் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659  வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், இரு தொகுதிகளிலும் ஜெயிக்கப்போவது யாரு? என்பதை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.