காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் 68-வது பிறந்தநாள்: சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது!

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் 68வது பிறந்த நாள் விழா, சென்னை சத்திய மூர்த்தி பவனில் செவ்வாயன்று  கொண்டாடப்பட்டது.

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சிவராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், கேக் வெட்டியும், நலதிட்டங்கள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, பிறந்தநாள் கேக் வெட்டி நலதிட்டங்களை வழங்கினார்.

விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஆர்.தாமோதரன்
பொது செயலாளர்  கீழானூர் ராஜேந்திரன், கோபன்னா, .சிரஞ்சீவி,
பவன்குமார்,  வீரபாண்டியன், சேரன்,  எஸ் கே நவாஸ் மற்றும் காங்கிரஸ் முன்னனி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கே.எஸ்.அழகிரி பிறந்தநாளின் ஒரு பகுதியாக, பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தார்கள். சிவானந்தா குருகுலத்தில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் அளவூர் நாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக, செந்தமிழ்செல்வன், வாஸ்து விநாயகம், சம்பந்தம், மனோகரன், பாஸ்கரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.