மகாராஷ்டிரா அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நேற்று, மகராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 சதவிகிதமும் , மராட்டியத்தில் 60.5  சதவிகிதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இவ்விரு மாநிலங்களிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 6 மணி வரை  நடைபெற்றது.

மாலை 6 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 60.5 சதவீத வாக்குகளும், அரியானாவில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. எனினும் இறுதியான வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாககவும் போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி, இவ்விரு மாநிலங்களிலும் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, சிஎன்.என் தொலைக்காட்சி உள்ளிட்டவை வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக 52 முதல் 75 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல்., மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி, 166 முதல் 243 தொகுதிகள் வரையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.