கல்கி ஆசிரம ரெய்டுகள் முடிந்தன: ரூ.409 கோடி மதிப்புள்ள நகைகள், பணம் பறிமுதல்!

கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள் , பல கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம்,  அமெரிக்க டாலர்கள்,  தங்க வைர நகைகள், ஹவாலா பணம் உள்ளிட்டவை குறித்து  வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:

கல்கி சாமியாரின் மகன் வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை நடத்திய 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனங்களின் வட்டி வருவாயான ரூ.90 கோடியை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாமியார் குடும்பம் வெளிநாடுகளில் சொத்துக் குவித்துள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.