வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற: வாடகை ஒப்பந்த பத்திரம் போதுமானது!

வங்கி கணக்கு தொடங்குவது முதல், அனைத்துக்கும் ஆதார் அட்டை முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதனால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வேறு வீட்டுக்கு மாறும்போது, ஆதார் அட்டையில் உள்ள முகவரியையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடகை வீடுகளில் வசிப்பவர்களும், வாடகை ஒப்பந்த பத்திரத்ததை ஆவணமாக பயன்படுத்தி இனி எளிதாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்தை மேற்கொள்ளலாம்.

ஆன்லைனில் முகவரியை மாற்ற யாருடைய ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டுமோ, அவரது பெயரில், வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் இருக்க வேண்டும்.

வேறு பெயர்களில் இருந்தால், கடிதம் சரிபார்ப்பு சேவையை அவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் பல பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், அதனை ஒரே பிடிஎப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆதார் சேவை மையத்தில் ஆப்லைன் மூலம் முகவரி மாற்றம் செய்ய…
வீட்டு வாடகை ஒப்பந்த ஒரிஜினல் பத்திரத்தை, ஆதார் சேவை மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்கள் ஸ்கேன் செய்துகொண்டு உங்களிடமே அதை திருப்பி தந்துவிடுவார்கள்.

வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ் காப்பி, அங்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.