தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா அடித்த சதத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டுள்ளது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 10 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் விராட் கோலியும் 12 ரன்களில் வெளியேறினார்.

இதனால்,  இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் தொடக்க வீரர் ரோகித் சர்மாவும், ரஹானாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர்.

இந்நிலையில், ரோகித் சர்மா சதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். மேலும்,  ரஹானா அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணி தற்போது 3 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளது.