திருச்சி நகை கொள்ளையனின் வாக்குமூலம்: பதற்றத்தில் சினிமா நடிகைகள்!

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பிடிபட்ட சுரேஷ் என்பவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

வழக்கின் முக்கிய புள்ளியான முருகன், சினிமா தயாரிக்க ஆசைப்பட்டு கையை சுட்டுக்கொண்டான் என்று கூறினான். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதனால் அவருக்கு உயிர் கொல்லி நோய் வந்ததாகவும் கூறினான்.

அதற்கு சிகிச்சை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த பிறகு, தமிழின் முன்னணி நடிகையாக விளங்கிய வாரிசு நடிகையை, ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்ய பேசினோம்.

அவர் ஆரம்பத்தில் இப்போது ரொம்ப பிசியாக இருப்பதாக கூறினார். பின்னர், நாங்கள் நகைக்கடை அதிபர் என்று சொல்லி, மூன்று லட்ச ரூபாய் நெக்லஸ் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தோம். அதை அப்படியே வாங்கிக்கொண்ட பின்னரே எங்கள் வழிக்கு வந்தார்.

இது தவிர, உள்ளூரில் போலிஸ் கெடுபிடி இல்லாமல் இருக்க, அங்குள்ள சில காவல்துறை உயர் அதிகாரிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஒருவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்ததாகவும் வாக்குமூலம் கூறியுள்ளான்.

அதேபோல், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டதாகவும் கூறி உள்ளான்.

இந்த வாக்கு மூலத்தில் சில நடைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயரையும் அவன் கூறியுள்ளதால், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகள், விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் பதற்றத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்னும் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனிடம் முழுமையான வாக்குமூலம் வாங்கப்படவில்லை. அப்படி                   கும்போது,சுரேஷ் சொன்னதை அவன் உறுதிப்படுத்துவானா? அல்லது இதைவிட பரபரப்பான தகவல்கள் ஏதேனும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அத்துடன், முருகன் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டதற்கு, நடிகைகளுடன் ஏற்பட்ட தவறான பழக்கமே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதால், சம்பந்தப்பட்ட நடிகைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தினால், பலர் அதிக பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே, தகவல்களும் முழுமையாக தெரிய வரும். இது இன்னும் யார் யாரை சிக்கலில் மாட்டி விடப்போகிறதோ என்ற அச்சமே தற்போது மேலோங்கி இருப்பதாக கூறப்படுகிறது.