வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களில் தொடங்கும்!

 வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில்   தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதம் அதிகமாக நீடித்துள்ளது. எனினும், இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் 17 ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள்,  ராயசீல சீமா,  தெற்கு மற்றும் கர்நாடகாத்தின் உள்பகுதிகள் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு, பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.