நான் முதல்வரானால் நேர்மையாக இருப்பேன்: கமலஹாசன்!

நான் முதல்வராக வந்தால் நேர்மையாக இருப்பேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியில் யார்  அமர்ந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் நான் முதல்வர் ஆனால் நேர்மையாக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நடிகர்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான்.

அப்துல் கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை. அவரை அனைவரின் நெஞ்சிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

புத்தரும், அப்துல் கலாமும் ஒன்று தான். நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். கலாம் அவர்களிடம், நான் 3 மணி நேரம் பேசியது என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கல்வியின் பின்னால் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது.என்பது புரிந்து கொள்வதுதான்.

மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள். கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நான் உங்களை வரவேற்கிறேன்

குப்பை, சாக்கடை இருக்கும் இடத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் அரசியலில் வந்து சுத்தம் செய்ய வேண்டும். விவசாயம் சரியில்லை என்று சொல்லுவதைவிட, முறையான பயிற்சி பெற்று  விவசாயம் செய்ய வேண்டும்.

நான் முதல்வர் ஆனவுடன் போடும் முதல் கையெழுத்தை விட, முதல்வர் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும்.

யார் முதல்வர் பதவியில் இருந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கமலஹாசன் குறிப்பிட்டார்.