தமிழ் படங்களில் நடிக்க வரும் கிரிக்கெட் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக இருந்த ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர், தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி, கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில், தமிழில் அடிக்கடி டுவிட் செய்து தமிழ் மக்களின் நெஞ்சம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏ-1 படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் நடிக்க கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதனால், ஹர்பஜன் சிங்குக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவத்துள்ளார். அதில் ஹர்பஜன் சிங் கூறி இருப்பதாவது:-

என்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், சினிஷ், சந்தானம் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி, தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்குக் காரணம் சரவணன் பாண்டியன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் மற்றொரு படத்தில்,  நடிப்பதற்காக முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த இர்பான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பெரிய பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், வெளிநாடுகளில் இதற்கான படப்பிடிப்பு இடங்கள் குறித்த தேர்வு நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.

இதற்குமுன்,  தமிழில் அனுராக் காஷ்யப்பை வில்லனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.