உலக இளையோர் செஸ் சாம்பியன்:  சென்னை சிறுவன் பிரக்னாநந்தாவுக்கு தங்கம்!

மும்பையில் நடந்த 18 வயதுக்குக் குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா தங்கப்பதக்கம் வேன்றுல்லான்.

மும்பையில் நடந்த இப்போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். பிரக்னாநந்தா பங்கேற்றார்

இதில் நேற்று நடந்த 11-வது மற்றும் இறுதிச்சுற்றில், பிரக்னாநந்தா ஜெர்மனி வீரர் வேலன்டைன் பக்லஸை வீழ்த்தினார். இதன் மூலம் 11 சுற்றுகளில் 9 புள்ளிகளுடன் பிரக்னாநந்தா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2-வது இடத்தை ஆர்மேனிய வீரர் சாந்த் சர்க்யாசன் வென்றார்.

இது தவிர இந்தியாவுக்கு மகளிர் பிரிவில் 14  –  16 –  18 வயது  பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைக்க உள்ளன.