வெளுத்து கட்டும் பிகில் ட்ரைலர்: ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளை தாண்டியது!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம்  வெளியானது.

ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். நேற்றுவரை, மொத்தமாக சுமார் 14 லட்சம் பேர்   அந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.

இணையத்தில் வெளியான  ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் தொடர்ச்சியாக மேலும் சில சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

தென்னிந்திய திரைப்படங்களின் ட்ரெய்லர்களில் குறைவான நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முதல் சாதனை.

மேலும், 16 லட்சம் லைக்குகளை குவித்த முதல் தென்னிந்தியப் படத்தின் ட்ரெய்லர் பிகில்தான். வெளியிட்ட 38 நிமிடங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

நேற்று வரை,  1.7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் இடம்பெற்றுள்ள சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும்,  இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு ஷாருக்கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட  பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத்  தெரிவித்துள்ளனர்.

எனினும்,  ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஆரம்ப வசனக் காட்சி, அப்படியே ‘சக் தே இந்தியா’ படத்தின் காப்பி என்றும் கூறப்படுகிறது.