கவிஞர் பழமலய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்பட்ட சிறந்த எழுத்தாளர், கவிஞர் த. பழமலய்.

மகாகவி பாரதிக்குப்பின் உருவான பல்வேறு கவிதை இயக்கங்களிலிருந்து, 1988 -இல் ஒரு மாறுபட்ட எழுத்து மொழியை கவிதையில் உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

இதனால் பாரதியைப் போலவே இவரை அடியொற்றி கவிதையில் பழமலய் பரம்பரை என்று கவிஞர்கள் உருவாயினர்.

இந்நிலையில், பழமலயின் இலக்கியப் பணியைப் பாராட்டி சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  நேற்று  நடைபெற்ற ‘பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில்’ இவருக்கு எழுத்தாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.