நடிகர் விஜயின் பிகில் பட டிரெய்லர் வெளியீடு: சமூக ஊடகங்களில்  அமோக வரவேற்பு!

நடிகர் விஜய்யின் பிகில் பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கூறியுள்ளது.

அட்லி இயக்கி, கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  விவேக், கதிர், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா என நட்சத்திர பட்டாளங்களின் எண்ணிக்கை நீளுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு  ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்  இருக்கிறார். தயாரித்துள்ளனர்.

படத்தில்,  அப்பா, கால்பந்து பயிற்சியாளர், கால்பந்து வீரர் என மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ளார் என்று படத்தின் டிரெய்லரை பார்த்தால் தெரிகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், பெரிய அளவில் விற்பனை ஆகியுள்ளது. மெர்சல், தெறி என ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை விஜய்-அட்லி ஜோடி கொடுத்துள்ளதால், விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிகில் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி உள்ளது. வழக்கம்போல ரசிகர்கள் மத்தியில் இதுவும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டு நிமிடம் நாற்பது வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரில், மூன்று வேடங்களிலும் விஜய் தோன்றும் அதிரடியான காட்சிகள் இடம்பெறுகின்றன.

கால்பந்து போட்டிகளில் விளையாடுவது, அதிரடி சண்டை,  நயன்தாராவுடன்  நடனம், உற்சாகப்படுத்தும் வசனம் உள்ளிட்ட விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து மகளிருக்காக இந்தப் படம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று சொல்லி    ஹேப்பி தீபாவளி நண்பா என்று டிரெய்லர் முடிவடைகிறது.