சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகள்: கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகள் விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் மிதாலி ராஜ். இவர் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்.

1999-ம் ஆண்டு, தமது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேச அரங்கில் காலடி வைத்தார். கடந்த 18 ஆண்டுகளில் மிகப் பெரிய உயரத்தை அடைந்த மிதாலி, 184 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 49 அரை சதங்களுடன் 6 ஆயிரத்து 137 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகள் விளையாடிய   முதல் வீராங்கனை என்ற பெருமை மிதாலி ராஜுக்குக் கிடைக்துள்ளது. மிதாலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அவர் 20 வருடங்கள் மற்றும் 105 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

20 வருடங்கள் ஒரு நாள் போட்டியை விளையாடிய முதல் பெண் வீரரும் மிதாலி ராஜ்தான். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையும் புரிந்துள்ளார்.

36 வயதான மிதாலி ராஜ், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து 10  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுபோல, 89 டி-20 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த மாதம் டி – 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.