கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் வரும் 14 ம் தேதி தொடங்குகிறது!

கால்நடைகளை தாகும் முக்கிய நோய்களில் ஒன்றான கோமாரி நோயை தடுக்க, தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

இந்த முகாம் அடுத்த மாதம் 22 ம் தேதி  வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் 94 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். இந்நோய் 63 வகை யான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக் கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக் கிலும், கால் குளம்புகளுக்கு இடை யிலும் புண்கள் ஏற்படும். இதனால் பால் கறவை குறையும். பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். எனவே, இந்நோய் தாக்காமல் இருப் பதற்கு மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போடுவதே சிறந்த நிவாரணம்.

இதற்காக, தேசிய கோமாரி தடுப்பூசி திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வரும் 14-ம் தேதி முதல் அடுத்தமாதம் அதாவது,. 22 ம் தேதி வரை  கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேசிய கோமாரி தடுப்பூசி திட்டத்தின்கீழ்,  கடந்த 2011 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 16 சுற்றுகளாக தடுப்பூசி போடும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது, தமிழகம் முழுவதும், கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் 17-வது சுற்று நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் 3 மாதங்களுக்கு மேற்பட்ட கன்று, பசு, எருது, எருமை உள்ளிட்ட கால்நடைகளை முகாமுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.