ஊடகங்களை தவிர்ப்பது ஏன்? நயன்தார விளக்கம்!

ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து, உலகின் முன்னணி இதழான வோக் இந்தியா என்ற இழழுக்கு அளித்த பேட்டியில் நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களின் முன்னணி நாயகியாகவும் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

முன்னணி ஆண் நடிகர்கள் நடிக்கும் படங்களே தோல்வியை தழுவும் நிலையில், நயன்தாராவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிபெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றன.

இந்நிலையில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களை கௌரவப்படுத்தும் வகையில், வோக் இதழ், அவர்களது அட்டைப்படத்துடன், பேட்டியையும் வெளியிட்டு, சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நயன்தாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், பேசியுள்ள நயன்தாரா, மனதில் உள்ளதை எல்லாம் அவ்வப்போது ஊடகங்களுக்கு சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றார்.

மேலும், ஆரம்பகாலத்தில் ஊடகங்களில் வந்த செய்திகள் தமக்கு பாதிப்பு ஏற்படுத்தியதையும் கூறியுள்ளார். என்னை ஏளனமாக பார்த்தவர்கள், நகைத்தோர் என அனைவருக்கு நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான பதில் என்னுடைய வெற்றிப்படங்கள்தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.