சிறந்த கவிஞர் – இசையமைப்பாளர் யார்? விழாவில் மோதிக்கொண்ட இளையராஜா-வைரமுத்து!

பழம்பெரும் பின்னணி பாடகி திரையுலகுக்கு வந்து 65 ஆண்டுகள் நிரவைந்துள்ளது. இதையொட்டி சுசீலா 65’ என்ற பெயரில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திரியுலகை சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய இளையராஜா, பாடகி சுசீலா பாடிய மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலைப் பாடி, பாடல் வரிகள், இந்த கால இளைஞர்களுக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று யோசித்து பார்க்க வேண்டும் என்றார்.

அதனால்தான், கண்ணதாசனை போல ஒரு கவிஞர் உலகத்திலேயே கிடையாது. பாடலை சொன்னவுடன் வரிகளை சொல்லும் ஒரே கவிஞர் உலகத்தில் கண்ணதாசன் மட்டுமே. கண்ணதாசனின் புகழ் ஓங்கும் வகையில், சுசீலா அந்த பாடலை பாடி, மெல்லிசை மன்னர் இசை அமைத்தார் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய வைரமுத்து, எளிமையாக இருக்கும் சுசீலாவின் குரல், பாடும்போது தேவதையாக மாறிவிடுகிறது என்றார். பின்னர் உலகத்தில் சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்பதிலும், சிறந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்றார்.

கண்ணதாசன் சிறந்த கவிஞர் என்று இளையராஜா கூறியதற்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் சிறந்த இசை அமைப்பாளர் என்று வைரமுத்து கூறியதன் வாயிலாக, இருவருக்கும் இடையே மனதளவில் இருந்த மோதல் வார்த்தையாக பொது மேடையில் வெளி வந்து விட்டது.

இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்து எத்தனையோ பாடல்களுக்கு உயிரோட்டத்தை குறைவற கொடுத்ததனால், அவை இன்றும் ஓயாத அலைகளாக தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் ஒய்யாரமாய் இன்றும் ஒழித்துக் கொண்டிருக்கின்றன.

இருவரும் இணைந்து உருவாக்கிய பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற பாடல்தான், இந்த இருவரையும் வெவ்வேறு பக்கத்துக்கு திருப்பிவிட்ட கடைசி பாடல்.