வெப்ப சலனம்: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சின்னக்கல்லார் பகுதியில் 5 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.