பேனர் வைக்காமல் இருப்பதே பெரிய விளம்பரம்: பிரதமருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்!

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து, அனைத்து கட்சிகளும் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

இந்நிலையில், இந்திய-சீன உச்சி மாநாடு வரும் 12, 13 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளது.

இதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்க எத்தனையோ வழிகள் உள்ளன. ஊடகங்கள், பத்திரிகைகள், தனியார் சுவர்கள் என இருக்கும் போது, பேனர் அவசியம் இல்லை. அதை பார்த்தே பிரதமரும், சீன அதிபரும் புரிந்து கொள்வார்கள். எனவே, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசே, சட்டத்தை வளைக்க காரணமாக இருக்கக்கூடாது என்று கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.

பேனர் இடையூறு கலச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ வேண்டும்” என்று குறிப்பிட்ட கமலஹாசன், “இது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும். பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் பிரதமரே. அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரமாக இருக்கும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பேனர் வைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்ட அதிமுகவே,  பிரதமர் மோடி வருகையின்போது பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது. மோடி வருகையின்போது பேனரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.