காந்தியின் நினைவாக 150 ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்!

மகாத்மா காந்தியின் நினைவாக அவரது  உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த  தினமான நேற்று குஜராத் மாநிலத்தில் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.

அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, தூய்மை இந்தியா தொடர்பான விழாவில் பங்கேற்றார். குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் இதில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.