தீபாவளி அதிரடி சலுகை: 4ஜி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை!

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை ஒட்டி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி சலுகையாக ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் ரூ.699/-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளருக்கு, 800 ரூபாய் மிச்சமாகும். இதற்கு எந்தவித நிபந்தனைகளும் கிடையாது. பழைய போன்களை எக்ஸ்சேஞ் செய்து கொள்ள வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள சலுகைகளும், முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்களும் இலவசமாக கிடைக்கும்.

இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2 ஆயிரம் எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதியும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.