விறுவிறுப்பாக இயங்கும் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்: தேர்தல் நிதி வழங்க திணறும் திமுக நிர்வாகிகள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் விறுவிறுப்பாக தேர்தல் பணியை தொடங்கி விட்டார்.

முதல் கட்டமாக, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக எம் எம் ஏ க்கள், நிர்வாகிகள் என அனைவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி, அவர்  ஆதரவு திரட்டி வருகிறார்.

முதல் கட்டமாக, விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி, ரவிகுமாரை சந்தித்து, பொன்னாடை போர்த்தினார். அப்போது அங்குள்ள தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ரவிகுமார் வெற்றி பெற கடுமையாக உழைத்த தங்களுக்காக விடுதலை சிறுத்தை கட்சியினர் கடுமையாக செயல்படுவார்கள் என்று கூறி உற்சாகப்படுத்தினர்.

எனினும், அதிமுக வேட்பாளருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் செய்யும் செலவுக்கு ஈடுகொடுக்கு முடியுமா? என்ற திணறலில் திமுக பொறுப்பாளர்கள் இருக்கின்றனர்.

மாவட்ட செயலாளர்கள் 25 லட்சமும், எம் எம் ஏக்கள் 10 லட்சமும் இடைத்தேர்தலில் செலவு செய்ய வேண்டும் என்று, திமுக தலைமை சார்பில் கூறப்பட்டுள்ளது,

இது, மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம் எல் ஏ க்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் வேறு வழியின்றி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

அத்துடன், பணபலம் உள்ள எம்.பி ஜெகத்ரட்சகனும் தொகுதி பொறுப்பில் இருப்பதால், ஆளும் கட்சிக்கு நிகராக பணம் நிச்சயமாக இறக்கிவிடப்படும்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.