இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்:  8 ஆண்டுகளாக முதலிடத்தில்  முகேஷ் அம்பானி!

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களது சொத்து மதிப்புக்களும் உயர்ந்து கொண்டே வருகின்றன.

இந்தநிலையில், இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவங்களின் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கும்  மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 953 பேராக உயர்ந்துள்ளது.

இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி.

அடுத்ததாக, இந்துஜா குடும்பத்தினர் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2 வது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் அசீம் பிரேம்ஜி உள்ளார்.

லட்சுமி மிட்டல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 300 கோடியுடன் ரூபாயுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். கவுதம் அதானி  94 ஆயிரத்து 500 கோடி ரூபாயுடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.

தொழில் அதிபர் உதய் கோடக் 94 ஆயிரத்து 100 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும்,  சைரஸ் பூன்வாலா .88 ஆயிரத்து 800 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்ட்ரி .76 ஆயிரத்து 800 கோடி ரூபாயுடன் 8-வது இடத்தில் உள்ளனர்.

சபூர்மிஸ்ட்ரி  76 ஆயிரத்து 800 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், திலீப்சங்கவி .71 ஆயிரத்து 500 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.