இடைத்தேர்தல் விவகாரம்: சமாளித்த எடப்பாடி – சமாளிக்கும் பொன்னார்!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியை, அதிமுக கூட்டணியில் பாஜக கேட்டு வாங்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் இறுதியில் அந்த தொகுதியில் அதிமுகவே வேட்பாளரை அறிவித்தது.

பாஜக முக்கிய தலைவரான ராஜ்நாத் சிங்கை சந்தித்த முதல்வர் எடப்பாடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்மையில் இந்தி மொழி பற்றி கூறிய கருத்து, தமிழகத்தில் பாஜகவின் மீது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்த நிலையில், பாஜக நாங்குநேரியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்று நைசாக சொல்லி மனதை மாற்றினார்.

மேலும், அதிமுகவுக்கும் கூடுதல் எம்.எல்.ஏக்கள் தேவைப்படுவதால், நாங்களே நேரடியாக போட்டியிடுவதுதான், திமுகவுக்கு சரியான போட்டியாக அமையும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இதையடுத்தே, நாங்குநேரியில் போட்டியிடும் தனது என்னத்தை பாஜக மாற்றிக் கொண்டது என்று கூறப்படுகிறது. எனினும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தரப்பில் இருந்து, இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில், திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னார், நாங்குனேரியை பாஜக கேட்டது என்பது தவறான தகவல் என்றார். மேலும், பாஜக ஆதரவளிக்கும் கட்சி, இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெரும் என்று கூறினார்.