கூந்தல் கருமையாக அடர்த்தியாக வளர…

கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர, கீழ்கண்ட மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை சாயத்தை பயன்படுத்தி பலன் அடையலாம்.

தேவையான பொருட்கள்: செம்பருத்தி இலை, மருதாணி இலை, அவுரி இலை ஆகியவற்றை தலா கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் மூன்று தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாக தட்டி, வெயிலில் காய வைக்கவும். பின்னர் அவற்றை செக்கில் ஆடிய தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெய்யை தொடர்ந்து தலையில் தடவி வர, கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.