பக்க விளைவுகள் இல்லாத இயற்கை ஷாம்பு

நூறு சதவிகிதம் ரசாயன கலப்பு இல்லாத இயற்கையான ஷாம்புவை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது முடி உதிர்வையும் தடுக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். மயிர்க்கால்களுக்கு அதிக உறுதியையும் தரும்.

தேவையான பொருட்கள்: வெந்தயம் ஒரு தேக்கரண்டி, உலர்ந்த நெல்லிக்காய் கால் கப். பூந்தி கொட்டை ஐந்து, உலர்ந்த சீயக்காய் கால் கப். தண்ணீர் அரை லிட்டர்.

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், இதை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

சுமார் இரண்டு மணி நேரம் கொதித்த பின்னர், இது சோப்பு மற்றும் கருப்பு தன்மை கொண்ட கரைசலாக மாறும். அப்போது அடுப்பை அனைத்து, கரைசலை வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைத்து கொள்ளவும். இதுவே, உங்களுக்கான இயற்கை ஷாம்பூ. இதை பயன்படுத்தி பாதிப்பு இல்லாத வாசனை கூந்தலை பெறுங்கள்.