நுரை பொங்கும் இயற்கை சீயக்காய் தூள்!

இயற்கையாக தயாரிக்கும் சீயக்காய் தூளில் போதுமான அளவு நுரை வராததால், பலர் ஷாம்பு வாங்கும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே முடிந்த அளவுக்கு இயற்கை சீயக்காய் பவுடர் தயாரிக்க, முற்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பூவந்தி கொட்டை என்னும் பூந்தி கொட்டையை சேர்த்துக் கொள்வது, நுரை பொங்கும் சீயக்காய் பவுடர் தயாரிக்க உதவும்.

தேவையான பொருட்கள்: சீயக்காய் இரண்டு கிலோ, பச்சரிசி ஒரு கிலோ, வெந்தயம் அரை கிலோ. இதில் பாதி அளவும் எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூந்தி கொட்டைகளை போதுமான அளவு, வாசனைக்காக சந்தன வில்லைகள் அல்லது காய்ந்த மரிக்கொழுந்து ஆகியவற்றை கலந்து காய வைக்க வேண்டும்.

பின்னர் இவற்றை தானிய அரவை மில்லில் கொடுத்து அரைத்தால், நுரை பொங்கும் இயற்கை சீயக்காய் பவுடர் தயாராகி விடும். வழக்கம்போல, எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். உடம்புக்கும் பயன்படுத்தலாம்.

இதை பயன்படுத்தினால், கம கமவென நுரை பொங்கும் சீயக்காய் பவுடருடன் ஆனந்த குளியலை போடலாம்.