இயற்கை ஹேர் டை

இயற்கையான ஹேர் டை தயாரித்து அதை தலையில் தடவினால், தலை முடிக்கும், உடலுக்கும் எந்த பாதிப்பும் வராது. அதை நீங்களே தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: அவுரி பவுடர், நெல்லிக்காய் பவுடர், மருதாணி பவுடர் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு அதை, தண்ணீர் அல்லது டீ சாயத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதை காலையில் எடுத்து, குழைத்து பிரஷை பயன்படுத்தி தலை முடியில் வழக்கமாக டை அடிப்பது போல் அடுத்து சுமார் ஒரு மணி நேரம் வரை தலையில் வைத்திருக்க வேண்டும்.

பின்னர், அதை நல்ல சீயக்காய் பவுடர் அல்லது ஷாம்பூ போட்டு கழுவி விடவும்.

இதில் உள்ள அவுரி பவுடர் கருமை நிறத்தையும், மருதாணி முடியில் நிறத்தை ஏற்றவும், நெல்லிக்காய் குளுமை மற்றும் முடியின் வலிமைக்காகவும் பயன்படும்.

முதல் தடவையே, நாம் எதிர்பார்த்த நிறம் வருவது கொஞ்சம் சிரமம். போகப்போக, மூலப்பொருட்களை பயன்படுத்தும் விகிதம் தெளிவாகும்.

எந்த பக்க விளைவுகளும் இல்லாத இயற்கை டை என்பதால், கண்டிப்பாக முயற்சிக்கலாம்.

மேலும் சிலர், அவுரி பவுடருக்கு பதில், நன்கு எரிந்து கருமையாக இருக்கும், கொட்டாங்குச்சியை தூளாக்கியும் அதில் பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.