வறண்ட முகம் வசீகரிக்க!

வறண்ட முகம் வளமிழந்து, களையிழந்து பொலிவின்றி இருப்பதை மாற்றி, வசீகரிக்கச் செய்ய இயற்கையான வழியை நாம் பின்பற்றலாம். அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இயற்கையானதாக இருப்பதால், பக்க விளைவுகளுக்கு வேலை இல்லை.

தேவையான பொருட்கள்: மகிழம் பூவின் உலர்ந்த பொடி இருநூறு கிராம். கிச்சிலி கிழங்கு பொடி நூறு கிராம். கஸ்தூரி மஞ்சள் போடி நூறு கிராம். கோரை கிழங்கு போடி நூறு கிராம். உலர்ந்த சந்தன தூள் நூற்றி ஐம்பது கிராம்.

இவற்றை ஒன்றாக கலந்து, காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீரை விட்டு அரைக்கவும். பின்னர் அதை சிறு சிறு வில்லைகளாக தட்டி, நிழலில் உலர்த்தி நன்றாக காய வைக்கவும்.

இதை தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்னர், பாலில் குழைத்து, முகத்தில் தடவவும். அப்படியே ஓர் அரை மணி நேரம் வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். சோப்பு பயன்படுத்த கூடாது.

இப்படியே சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், சிறிது நாளில் முகம் பளபளப்பாக மாறி வசீகரமாய் தோன்றும்.