ஓய்வின்றி உழைக்கும் மகரம்

நீதிமான் சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக் காரர்கள் உழைப்பதற்காகவே பிறந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஓய்வெடுக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே ஓய்வு கிடைத்தாலும், அந்த ஓய்விலும், அடுத்து என்ன செய்யலாம்? என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தொடங்கி விடுவார்கள்.

உத்திராட நட்சத்திரத்தின் இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள், திருவோண நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், அவிட்டம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்கள் ஆவர்.

காக்கும் கடவுள் விஷ்ணு பகவான், இந்த ராசியில் உள்ள திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்ததால், அமைதியில் சாந்தமும், கோபத்தில் விஸ்வரூபமும் வெளிப்படும்.

பெருமாளை போலவே, அடிக்கடி குளிக்கவும், அரிதாரம் பூசிக்கொள்ளவும் அதிகம் விரும்புவார்கள். பலவற்றை அமைதியாகவும், சாதுர்யமாகவும் செய்து முடிப்பார்கள்.

இவர்கள் வசிக்கும் இடங்கள் பெரும்பாலும், நீரோடையை ஒட்டியோ, சமமற்ற மேடு பள்ளங்கள் நிறைந்த இடமாகவோ இருக்கும். சுடுகாடுக்கு அருகில் கூட இருக்கும்.

துணி வெளுக்கும் தண்ணீர் துறை, சலவை தொழிலாளர்களின் இருப்பிடம், சலவை நிலையம் போன்ற ஏதாவது ஒன்று அருகில் இருக்கும். அந்த பகுதியில், பன்றி அல்லது கழுதைகளின் நடமாட்டத்தையும் பார்க்கலாம்.

வீட்டில் அடிக்கடி எலிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதையும் காணலாம். பல பொருட்களை எலி கடித்து வைப்பதும், குழாய்களில் அடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகும்.

இவர்களுக்கு தீராத உடல் வலி அல்லது நோய் இருந்தால், சலவை தொழிலாளியின் கைகளால் மருந்து தர சொல்லி உட்கொண்டாலோ, தைலம் தேய்த்து விட்டாலோ விரைவில் குணமாகும்.

அதேபோல், மகர ராசிகாரர்களுக்கு திருமணம் நடப்பது தாமதமானால், சலவை தொழிலாளிக்கு புதிய துணிகள் வாங்கி கொடுத்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பரவலாக நம்பிக்கை உள்ளது.

மகர ராசியில் பிறந்தவர்கள் வீட்டில் இரண்டு திருமணம் செய்தவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அதேபோல. இந்த ராசி அல்லது லக்னத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்த வீட்டில் அல்லது உறவில் ஒருவர் மரணம் அடைவார்.

மகர ராசி காரர்களுக்கு, வேலை எளிதாக கிடைக்கும். அதை பயன்படுத்தி கொள்வது, அவர்களது திறமை. அதேபோல, வங்கிகளில் கடன் எளிதாக கிடைக்கும், அதை பயன்படுத்தி முன்னேறலாம். கூடுமானவரை, தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது, அது சிக்கலை ஏற்படுத்தும்.

இவர்களுக்கு வீடு, மனை, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை எப்போதும் ஏதாவது ஒன்று இருக்கும். அதேபோல், அரசாங்கம் கையகப்படுத்தும் நிலங்களில் பெரும்பாலான நிலங்கள், மகர ராசிக்காரர்களின் நிலங்களாக இருக்கும்.

காசோலை போன்ற முக்கிய ஆவணங்களை அடிக்கடி தொலைத்து விட்டு தேடுவதும், அவற்றை கவன குறைவால் தண்ணீரில் நனையவிட்டு தவிப்பதும் இவர்களின் வாடிக்கை. எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

வாய் வார்த்தையை நம்பி, கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வது ஆபத்தில் வந்து முடியும். எனவே, எதையும் எழுத்து பூர்வமாக செய்வதே நல்லது.

எப்போதும் கடுமையாக உழைத்துதான் முன்னுக்கு வர முடியும். இவர்களிடம் எந்தவித ரகசியமும் தங்காது.

சகோதரனால், கொஞ்சம் விரயம் ஏற்படும். சகோதரன் வெளியூர் அல்லது  வெளிநாட்டில் இருந்தால் நல்லது.

வீடு, மனை, வாகன சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏதாவது ஒரு சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதிர்ஷ்டம் நிறைந்த, முதலீடு இல்லாத தொழில்கள் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். சொகுசு வாகனங்கள் மீதும் ஒரு மோகம் இருக்கும்.

வங்கி கடன் உள்ளிட்ட எந்த கடனும் இவர்களுக்கு எளிதாக கிடைக்கும். ஆனால், தனியாரிடம் கடன் வாங்குவது சிக்கலை தரும்.

தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக

மகர ராசிக்காரர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள, சுக்கிரனுக்கு உரிய வெள்ளை அல்லது பிங்க் நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தடைகளையும், இடையூறுகளையும் தகர்த்து எறிய, சிவப்பு நிற ரிப்பனை செவ்வாய் கிழமைகளில் கத்தரி கோலால் துண்டு, துண்டாக வெட்டி போடவும்.

சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழைகள், யாத்ரீகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு, சுவீட் போன்றவற்றை தானம் செய்தால் எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று லால் கிதாப் கூறுகிறது.

மேலும், பாலும் சர்க்கரையும் கலந்த நீரை ஆல மர வேரில் ஊற்றி, அதில் இருந்து மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள செல்வ வளம் பெருகும்.

இவை அனைத்தும் மகர ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

என்ன நண்பர்களே, இது போல மற்ற ராசிகளுக்கான பலன்களையும் காண Virgo News இணைய தளத்தை பாருங்கள்.  இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் Virgo News பக்கத்தை லைக் பண்ணுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள். நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *